முக்கிய செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த உண்மையை வெளியிட்டதற்கு நன்றி ஹெலாந்தே: ராகுல்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தை பற்றி தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலந்தேவுக்கு(François Hollande), நன்றி தெரிவிப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

இதனை தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் பதிவிட்டிருக்கிறார். பிரான்ஸ் முன்னாள் அதிபரின் கருத்தின் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் ஒப்பந்தம் எப்படி, திவாலான நபரான அனில் அம்பானிக்கு கைமாறியது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இந்தியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி துரோகம் செய்துவிட்டார் என்றும், தியாகம் நிறைந்த நமது ராணுவ வீரர்களை அவமதித்துவிட்டார் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

Thanks to François Hollande: Rahul