
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 45-வது குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் ( தவத்திரு குன்றக்குடி அடிகளார்) அவர்களின் 27-ஆம் ஆண்டு குருபூசை விழா இன்று 07.04.2022 ஞாயிற்றுக்கிழமை சித்திரை நட்சத்திரத் திருநாளில் குன்றக்குடி ஆதீனத் திருமடத்தில் நடைபெற்றது.

விழாவில் முனைவர் திரு.சொ.சேதுபதி வரவேற்புரை நிகழ்த்தினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் விருது வழங்கி அருளாசி வழங்கினார் திருவருள்திரு குருமகாசந்நிதானம் பொன்னம்பல அடிகளார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் விருது தமிழாகரர் திரு.சாமி தியாகராசன், தமிழாகரர் திரு.மு.இராசரெத்தினம் இருவருக்கும் வழங்கப்பட்டது.

அருள்திரு கோவிந்தானந்த சுவாமிகள் , விஞ்ஞானி டாக்டர் திரு.கே.பாலகிருஷ்ணன் பாராட்டுரை வழங்கினர்.

விழாவில் முன்னாள் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்கள் முனைவர் திரு.இராசாமி மற்றும் முனைவர்.திரு.சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தவத்திரு குன்றக்குடி அடிகளார் சமாதியில் தீபாராதனை நடைபெற்றது. அடிகளார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்