
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் அமைந்துள்ள திருவண்ணாமலை ஆதீன மடத்தின் 47-வது குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் 57-வது பிறந்ததினம் இன்று,

தவத்திரு பொன்னம்பல அடிகளார் ஆன்மீக சேவையுடன் சமூக சேவையாற்றி வரும் அருளாளர், அடிகளாரின் 57-வது பிறந்த தினத்தை முன்னிட்டு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாருக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றனர்.
காலையில் ஆதீன மடத்தில் உள்ள காளத்தீனாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதுபோல் மலைமேல் உள்ள சண்முகநாதருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
செய்தி &படங்கள்
சிங்தேவ்