தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் 99-வது பிறந்த நாள் அரசு விழாவினை யொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பிறந்த நாளை அரசு விழாவாக வருடம் தோறும் தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் மணிமண்டபத்தில், இன்று (11.07.2023) தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 99-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அரசின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.செல்வராஜ் , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி , குன்றக்குடி ஆதினம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் மற்றும் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.சோ.பால்துரை மற்றும் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு மண்டபத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், பகுத்தறிவுத்தந்தை பெரியார் ஆகியோருடன் கலந்துரை யாடிய புகைப்படங்கள் சமூக நீதி ஒற்றுமைக்காக பணியாற்றிய காலக்கட்டத்தின் புகைப்படங்கள் என எண்ணற்ற அறியத்தக்க வகை புகைப்படக்கண்காட்சிகளை பார்வையிட்டார்கள்.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 99-வது பிறந்தநாளுக்கு வருகை புரிந்தவர்களை வரவேற்ற குன்றக்குடி அடிகளார் ஐடிஐ மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.மு.ராஜசெல்வன், திருப்பத்தூர் வட்டாட்சியர் திரு.வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி மஞ்சரி லெட்சுமணன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.மருதுபாண்டி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கே.எஸ்.எம்.மணிமுத்து, முன்னாள் கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கரு. அசோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்