முக்கிய செய்திகள்

நெல்லை இளம்பெண்ணுக்கு ரயிலிலேயே பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது

வடமாநிலத்தில் இருந்து ஹவுரா விரைவு ரயிலில் வந்த நெல்லையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ரயிலிலேயே பெண் குழந்தை பிறந்தது.

கொல்கத்தாவில் இருந்து வரும் ஹவுரா விரைவு ரயிலில், நெல்லையைச் சேர்ந்த ஸ்வர்ண லதா என்ற இளம்பெண் விசாகப்பட்டிணத்தில் ஏறியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸ்வர்ண லதாவுக்கு வரும் வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடன் வந்த உறவினர்கள் சென்னையில் 108 சேவையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் மருத்துவக் குழுவினருடன் சென்னை எழும்பூரில் தயார் நிலையில் இருந்தனர். ஹவுரா விரைவு ரயில் எழும்பூரை வந்தடைந்ததும், பி2 பெட்டியில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ஸ்வர்ண லதாவுக்கு உடனடி சிகிச்சையை மேற்கொண்டனர். அப்போது, ஸ்வர்ண லதா, ரயில் பெட்டியிலேயே அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்ததை அடுத்து அப்பெண்ணை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா ரயில் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

The lady passenger gave birth to a female child in the Rail coach