3 எம்எல்ஏக்களை சென்றடைந்தது சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்!

அமமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் சென்றடைந்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களான கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், மே 23ம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் நிலையில் அதிமுகவின் மூன்று எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

185 பக்கங்களைக் கொண்ட அந்த நோட்டீஸ் மூன்று பேரையும் சென்றடைந்துள்ளது. அதில் டிடிவி தினகரனுடன் மூன்று பேரும் இருக்கும் நிழற்படங்களும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் கையில் கிடைத்ததால் 7 நாட்களுக்குள் எம்.எல்.ஏக்கள் மூவரும் விளக்கமளிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

 

எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி சங்கர் நடித்த “மான்ஸ்டர்” டீசர் வெளியீடு

வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

Recent Posts