தேனி, திண்டுக்கல், நீலகிரி உட்பட 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..


தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் தமிழக மீனவர்கள் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.