தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை : சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி, குற்றவாளிகள் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை உடன் சேர்த்து ரூ.31 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :சென்னை வானிலை ஆய்வு மையம்..

சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

Recent Posts