முக்கிய செய்திகள்

கப்பலும் வல்ல… ஹெலிகாப்டரும் வல்ல: கொந்தளிக்கும் குமரி மீனவர்கள்

ஓகி புயலின் போது குமரி்ப்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் சிக்கியதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 101 மீனவர்கள் மட்டும்தான் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்க இரண்டு கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி எந்த கப்பலும் கடல் பகுதிக்கு செல்லவில்லை என்று குமரி மாவட்ட மீனவர்கள் கொந்தளிப்புடன் கூறியுள்ளனர்.

செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பான பேட்டியில் அவர்கள் கூறியதாவது:

பெரிய ஆபத்தில் தமிழக மீனவர்கள் சிக்கிய பின்னரும் தமிழக அரசு மெத்தனமாக, செத்த சவம் போல  இருக்கிறது. எந்த உணர்ச்சியும் இல்லை. கேரள அரசு தங்கள் மாநில மீனவர்களை கப்பல் மூலமாக பத்திரமாக மீட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் எந்த கப்பலும் அனுப்பப்படவில்லை. ஆனால் எல்லாம் சென்றதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். எங்களை கேரளாவுடன் விட்டுவிடுங்கள். இந்த தமிழக அரசே வேண்டாம்.  பெத்த பிள்ளைகளைப் பார்க்காத தகப்பன் எங்களுக்கு எதற்கு…”

என சீற்றமும், வேதனையும் கொப்பளிக்கக் கூறியுள்ளனர்.

There is no help: Kanyakumari fishermen