
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்கடவுளான முருகக் கடவுளை வணங்கி ஐப்பசி மாதம் வளர்பிறையில் தொடங்கி சஷ்டி அன்று சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருந்து முருகப் பெருமாளை வழிபடுகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச் செந்துாரில் இவ்வாண்டு கோலாகலமாக சூரசம்கார நிகழ்வு நடைபெற்றது. திருச் செந்துார் கடற்கரையில் ஜெயந்தி நாதராக முருகன் தோன்றி சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அரோகரா கோஷம் விண்ணைத் தொடும் அளவிற்கு மக்கள் கோஷமிட்டனர்.நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
இதுபோல் உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.