திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் பணமில்லா தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி..

புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் நீதிமன்ற உத்தரவையடுத்து,

பொது தரிசனத்தில் வரும் பக்தர்களும், பணம் கொடுத்து தரிசனம் செய்யும் பக்தர்களும் ஓரே மாதிரி சன்னதி முன் செல்ல அனுமதிக்கப்பட்டதை பக்தர்கள் பலர் வரவேற்றனர்.

இது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நடைமுறைப்படுத்தினால் நல்லது எனவும் கருத்து தெரிவித்தனர்.

அடுத்த மாதம் சூரசம்கார விழா வரவுள்ளதால் திருச்செந்துார் கோயில் பிரகாரங்களை செப்பனிடும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினர்.

அதுபோல் தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் அர்ச்சர்கள் தரும் தொல்லைகள் அதிகமாகவே உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.

அவர்கள் தாங்கள் அர்ச்சனை செய்து தருவதாக பலவந்தமாக வலியுறுத்துவது பல பக்தர்களை முகம் சுளிக்க வைப்பதாக கூறினார்.

அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மேம்படுத்தவும் பலர் வலியுறுத்தினர்.

நன்றி

மேனா