முக்கிய செய்திகள்

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் பிரதமர் மோடி புகழாரம்..

பிரதமர் மோடி தனது டிவிட் பதிவில் திருக்கறள் பற்றி தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் தனது டிவிட் பதிவில்

“திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.”

என பதிவிட்டுள்ளார்.