திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் – திமுக தேர்தல் அறிக்கை : மு.க.ஸ்டாலின் வெளியீடு..

தேர்தல் களத்தின் கதாநாயகனாம் திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்
குடும்ப அட்டை ஒன்றுக்கு கொரோனா நிவாரன நிதியாக ரூ.4000 வழங்கப்படும்
உணவு கூடை திட்டம் – குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம்
ஆவின் லிட்டருக்கு – ₹3
பெட்ரோல் – ₹5
டீசல் – ₹4

மானியம்: சிலின்டருக்கு ₹100
தமிழகத்தில் 75% வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு தர சட்டம் நிறைவேற்றப்படும்
ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆட்டோ வாங்க பத்தாயிரம் மானியமாக வழங்கப்படும்
நீட் தேர்வை ரத்து செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்
உயிரிழந்த கொரானா முன்கள பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10000 மானியம்
தனியார் துறையில் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்படும்
கல்வியை மாநிலப் பட்டியலில் இணைக்க முயற்சி

பழங்குடியின பட்டியலில் மீனவ சமுதாயம் சேர்க்கப்படும்

சென்னையை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்க சிறப்பு குழு

ஏழை மக்கள் பசி போக்க 500 இடங்களில் கலைஞர் உணவகம்

சொத்துவரி அதிகரிக்க படாது
அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 ஆக அதிகரிப்பு
முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்
இயற்கை வேளாண்மைக்கு என தனி பிரிவு ஏற்படுத்தப்படும்
பெண்களுக்கு கர்ப்பகால நிதி 24000 ஆக உயர்த்தப்படும்.

மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

“எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்.

வள்ளலார் பெயரில் தனி சர்வதேச மையம் அமைக்கப்படும்

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்

1000 கோடி இந்து கோயில் புணரமைப்புக்கு, அனைத்து சாதிகளும் அர்ச்சகர் ஆக விரைந்து நடவடிக்கை.

“30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்!”

சென்னையை போல் சேலம், மதுரை, திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டம்.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்படும்

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி : அமமுகவில் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ..

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல்..

Recent Posts