புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குற்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் திருத்தளத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நாளை நடைபெறவுள்ளது.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும்.
இத்தலத்தில் அமைந்துள்ள சனீஸ்வரனை இறைவன் வணங்கி பேறு பெற்றார் என தல வரலாறு கூறுகிறது. அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார்.
இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் மற்றும் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
நாளை 11.02.2019 திங்கள் காலை 9.10 முதல் 10.20 மணிக்குள் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் அமைந்துள்ள
தர்ப்பாரண்யேசுவரர், அம்பாள், விநாயகர்,முருகன்,தியாகராஜர்,பரிகார மூர்த்தியான சனீஸ்வரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும்,
7 நிலை, 5 நிலை ராஜ கோபரம் மற்றும் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
அற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் சிவச்சாரியார்கள் யாகசாலை இறுதிக்கட்ட பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
காரைக்கால் மாவட்ட காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.