முக்கிய செய்திகள்

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை..

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாகம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து  திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து தென்பரங்குன்றம் வரை நடைபயணமாகச் சென்று அவர் வாக்குச் சேகரித்தார்.

அப்போது அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர். மக்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருடன் அவர் கலந்துரையாடினார்.