
திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமிக்கு மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோப்பு படம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துரில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குட்பட்ட திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமி கடந்த 19.08.2021 அன்று தனது 54 வயதில் மறைந்தது.

மறைந்த யானை சிவகாமியை கோயிலின் பின்புறம் உள்ள நந்தவனத்தில் அடக்கம் செய்யப்பட்டது. யானை சிவகாமி தனது 2 வயதில் தானமாக கோயிலுக்கு கொடுத்தவர்கள் கீழச்சுவல்பட்டி சிட்டால் ஆட்சி.

கடந்த 2021 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்த குன்றக்குடி ஆதீன திருப்பத்தூர் கோவில் யானை சிவகாமிக்கு சட்டப்பேரவையில் அறிவித்தபடி கற்சிலையுடன் கூடிய மண்டபம் கட்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். ரூ. 49 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மண்டபம் அமைய உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் சிவகாமி அம்மன் திருக்கோவிலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்த யானை சிவகாமி உயிரிழந்ததும் கோவில் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது யானை கொட்டகை அருகே மண்டபம் அமையஉள்ளது.

சிறப்பு பூஜைகளுடன் துவங்கிய அடிக்கல் நாட்டு விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் , இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் பழனிக்குமார் அடிக்கல் நாட்டினர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்