
திருத்தணியில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அம்மையார் குப்பத்தில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதற்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக இந்து வேத பண்டிதர்கள் கும்ப மரியாதை செய்தனர்.