முக்கிய செய்திகள்

திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் ஜாமீனில் வெளிவந்தார்..

முதல்வர், காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அமைக்கப்பட்டிருந்தார் நடிகரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏ.,வுமான கருணாஸ்.

இந்நிலையில் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து அவர் இன்று காலை வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்துள்ளது நீதிமன்றம்.