திருவையாறு தியாகராஜரின் 171-வது ஆராதனை விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார். விழாவில்திருவையாறு ஆராதனை விழா குழுத் தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 6 நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாளான இன்று கர்நாடக இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
