முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..

பஞ்ச பூதங்களில்அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வரும் டிசம்பர் 10-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று 3-ம் திருநாளான இன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

அண்ணாமலையார் உற்சவ மூர்த்தியாக சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.