திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் மகா தீபம்..

நினைத்தாலே முக்தியளிக்கும் தலமும் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

மகா தீபம் ஏற்றுவதற்காக 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது.

அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதன் பிறகு மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

மகா தீபம் ஏற்றப்பட்ட போது கோவிலில் குவிந்தி பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் விண்ணை முட்டியது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…

உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை:திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

Recent Posts