
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் மலையே கடவுளாகவும் வணங்கும் அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.
வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை திருநாளில் அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2665 அடி உயர மலையின் மீது தீபம் ஏற்றும் விழா சிறப்பாக நடைபெறும்.

2021 கார்த்திகை தீபத்திருவிற்கான பந்தகால் நடும் விழா இன்று நடைபெங்ஙது. நவம்பர் 10-ஆம் தேதி மலையின் மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறவுள்ளது.இதன் முதல் நிகழ்வாக பந்தகால் நடும் விழா இன்று அதிகாலை ராஜாகோபுரம் முன் நடைபெற்றது..
நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், அர்ச்சர்கள் பங்கேற்றனர்.