முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயில் கிரிவலம் 3-வது முறையாக ரத்து..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியை ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

கரோனா பாதிப்பால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் அண்ணாமலையார் கோயில் கிரிவலம் கடந்த இரண்டு மாதங்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரோனா தாக்கம் குறையாத காரணத்தால் 3-வது முறையாக கிரிவலத்திற்கு தடை விதித்தார் திருவண்ணாமலை ஆட்சியர்.