புகழ் பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருநாளை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
அண்ணாமலையார் பின்பறம் அமைந்துள்ள மலையின் உச்சியில்(2660 சதுர அடி) உயரத்தில் முக்கிய விழாவாக வரும் டிசம்பர் 13-ஆம் தேதி மாலை 6.மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.
நாள் தோறும் அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன் காலை, மாலை என இருவேலையும் வீதியுலா நிகழ்வு நடைபெறும்.
9-ஆம் தேதி வெள்ளிரத வீதியுலா, 10-ஆம் தேதி திருத் தேரோட்டம் நடைபெறும். 13-ஆம் தேதி காலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மலையில் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் திருவண்ணாமலை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் அறநிலையத்துறையும் எடுத்து வருகிறது.