
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகாதீபம் இன்று மாலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது. முன்னதாக இன்று காலை பரணி தீபம் கோயிலில் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
முன்னதாக கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கியது. தீபத்திருவிழாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20000 பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.