
திருவண்ணமலையில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2600 சதுர அடி உயரமுள்ள மலையின் உச்சியின் மீது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திபத்திருளான அன்று மாலை மகா தீபம் ஏற்றப்படும். அதற்கு முன்னோடியாக இன்ற அதிகாலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் அதிகாலை பரணி தீபம் எற்றப்பட்டது.
முன்னதாக அண்ணாமலையார் கோயிலில் கடந்த 10 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. கரோனா தொறறு காலம் என்பதால் தீபத் திருவிழாவிற்கு பக்தர்களக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.