முக்கிய செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அனைத்து கட்சிகளும் கோரிக்கை…

திருவாரூரில் இடைத்தேர்தலை நிவாரண பணிகள் நிறைவடைந்த பின் நடத்தலாம் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் நிவாரண பணிகள் நிறைவடைந்த பின் இடைத்தேர்தலை நடத்த வலியுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிற்பகல் 3மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.