திருவாரூர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மதிமுக, இ.கம்யூ., ஆதரவு

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ,தேசம் காக்க, தமிழகம் மீட்கப்பட  திமுகவுக்கு பேராதரவு அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ கூறியதாவது:

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவளிக்கும். மேலும் திருவாரூர் தேர்தலில் திமுக வெற்ற பெற மதிமுக பாடுபடும். திமுக வேட்பாளர் வெற்றி பெற ஊர் ஊராக பிரச்சாரம் மேற்கொள்வேன் . இந்த ஆண்டு யாரும் உதாசீனப்படுத்த முடியாத கட்சியாக மதிமுக திகழும் என்றார். 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போல் தற்போதும் திமுக கூட்டணி வெற்றி பெறும் .நாளை கூடும் சட்டமன்ற கூட்டத்தில் ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் .