தேர்தல் நடத்த வாய்ப்புகள் உள்ளதா? : விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்..

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் உள்ளதா என்று ஆய்வு செய்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் உள்ளதா என்று ஆய்வு செய்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்தி வைக்க வேண்டும் என்றும்

தேர்தல் நடந்தால் அது நிவாரண பணிகளை பாதிக்கும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உச்சநீதிமன்றத்தில் கடந்த புதனன்று வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து நேற்று, தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த டி.ராஜா, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் அந்த மனு மீது விரிவான ஆய்வு நடத்தி விளக்கம் சமர்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இது அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் தொடர்பாக இன்று நடைபெறவிருந்த அதிமுக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை கோவிலில் மேலும் ஒரு பெண் தரிசனம்…

ஐந்து மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடல்

Recent Posts