முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

காலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்பு அவர்கள் சந்நிதிக்கு அருகே உள்ள தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளினார்கள்.