உலகிலேயே அதிக வாசகர்களைக் கொண்ட “டைம் வாரஇதழ்” கைமாறியது ..

95 ஆண்டுகள் பாரம்பரியமும், உலகப்புகழ் பெற்றதுமான டைம் வாரஇதழ் மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப், அவரின் மனைவி லினியும் ரூ.1,395 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.

கடந்த 8 மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு முடிவுக்குவந்ததையடுத்து, 19 கோடி அமெரிக்கடாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த டைம் வார ஏடு கடந்த 1923-ம் ஆண்டு ஹென்றி லூஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் ஐரோப்பிய பதிப்பகம் லண்டனில் இருந்து பிரசுரமாகி வருகிறது.

கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளிலும் அச்சாகிறது.

ஆசியப் பதிப்பு ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தெற்கு பசிபிக் பதிப்பு சிட்னியை தலைமையிடமாகக் கொண்டும் இயங்குகிறது.

ஏறக்குறைய உலகம் முழுவதிலும் 50 நாடுகளில் டைம் ஏடு அச்சாகிறது.

உலகிலேயே மிக அதிகமான விற்பனையாகும் வார ஏடு டைம் இதழாகும். இதன் வாசகர்கள் எண்ணிக்கை 2.6 கோடியாகும்.

டைம் வாரஇதழை விலைக்கு வாங்கிய கோடீஸ்வரர் மார்க் பெனிஆப்