வேங்கடத்தானை வழிபடவும் இனி வேண்டும் ஆதார்!

வங்கிப் பரிவர்த்தனை, பொது விநியோகம் என அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டு வரும் ஆதார் அட்டை, இனி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யவும் தேவைப்படும்.   பக்தர்கள் வழிபட வேண்டும் என்றால் இனி ஆதார் அட்டையை கட்டாயப்படுத்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை  தரிசனம் செய்து வருகின்றனர். 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கும், டிக்கெட்டில் தரிசனத்திற்கான நேரம் குறிப்பிடப்பட்டு, பக்தர்கள் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதே போன்று இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 10ம் தேதி தொடங்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் டிக்கெட் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்படவுள்ளது.  இந்த திட்டம் குறித்து பக்தர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப,  பிப்ரவரி முதல் முழுஅளவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Tirupahi Tirumalai devasthanam decide to make compalsery Aadhar to devotees