முக்கிய செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வந்த சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு..

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தங்கள் இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த சொத்துக்கள் ஏராளமான அளவில் நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ளன.

நிறைவேறிய வேண்டுதல்கள் மற்றும் பலவிதமான காரணங்களை முன்னிட்டும் திருப்பதி ஏழுமலையானுக்கு சொத்துக்களை காணிக்கையாக சமர்ப்பிக்கும் நடைமுறை நீண்டகாலமாக உள்ளது.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த சொத்துக்களில், தமிழகத்தில் உள்ள 23 சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான குழுவையும் அமைத்துள்ளது.

இதேபோல, பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான இணையதள முகவரியும் மாற்றப்பட்டுள்ளது.
https:/ttdsevaonline.com என்ற இணையதள முகவரி நேற்று முதல் https:/tirupatibalaji.ap.gov.in eன்று மாற்றப்பட்டுள்ளது.சொத்துக்கள் விற்பனை மற்றும் இணையதள முகவரி மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஆந்திர அரசு, திருப்பதி கோவிலை தனது கட்டுப்பாடில் கொண்டு வர முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சியான ஜனசேனா கூறியுள்ளது.