திருப்பதியில் பிரம்மோற்சவத் திருவிழா தொடங்கியது..


திருப்பதி திருமலையில் ஒன்பது நாள்கள் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவத் திருவிழா இன்று பக்தர்கள் சூழ கோலாகலத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி திருமலையில் வைகாநஸ ஆகம முறைப்படி வேங்கடேசப் பெருமாளுக்கு தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் பல்வேறு வாகன வீதி உலா நடைபெறுகிறது.