திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கி.வீரமணி பொதுக்கூட்டத்துக்கு ஏற்கனவே கொடுத்திருந்த அனுமதியை திடீரென போலீசார் ரத்து செய்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திருப்பூர் – தாராபுரம் சாலையில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.