முக்கிய செய்திகள்

பாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு?..

ஜி.கே.வாசன் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லியல் பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்

ஜி.கே.வாசன்,இவர்களுடான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமாகாவினர் மத்தியில் பாஜகவில் கட்சி இணையப்போவதாக தகவல்கள் பரவி வந்தன.

தற்போது இந்சந்திப்பு அதை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளது.

தமாகாவை பாஜகவில் இணைத்து கட்சியின் மாநில தலைவர் பதவி கொடுக்கப்படவுள்ளதாக தமாகாவினர் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவி காலியாகவுள்ள நிலையில் பாஜக தமிழக தலைவர்கள் மாநில தலைவராக காய் நகர்த்தும் நிலையில் தமாகா பாஜகவில் இணைவதை தமிழக பாஜக தலைவர்கள் விரும்பவில்லை.
பாஜகவில் தமாக இணைகிறாா என்ற கேள்வியை செய்தியாளர்கள் பிரதமரை சந்தித்து வந்த ஜி.கே.வாசனிடம் கேட்டனர்.

அதற்கு வாசன் தமாக தனித்துவமாக இயங்கும் என்று தெரிவித்தார். இருந்தாலும் இரு கட்சியினரிடையே இணைவதற்காக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.