தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன்(71) சென்னையில் காலமானார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார்

பின்னர், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் மேம்பட்டது.

கடந்த சில நாள்களாக உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவே மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியானது. இந்தநிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பி.எஸ். ஞானதேசிகன், 2001ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் இருந்து இரு முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்தவர். 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு இணைய இதழ் சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் நல் வாழ்த்துகள்..

காரைக்குடியில் நிறைவேறாத பாதாள சாக்கடை திட்டம் : திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம்..

Recent Posts