முக்கிய செய்திகள்

82 வயதிலும் நாட்டியமாடி அசத்திய வைஜெயந்தி மாலா..

 

நாட்டியத்தை தன் உயிர் மூச்சாக சுவாசிப்பவர்தான் வைஜெயந்தி மாலா, இவர் நேற்று மாலை சென்னை நாரத ஞான சபாவில் நாட்டியமாடி அசத்தினார்.

தன்னுடைய 82 வயதில் அசாத்தியமாக நாட்டியமாடியதை நாம் பெருமை கொள்வோம். 82 வயதில் நடக்க முடியுமா என ஆச்சரியம் கொள்பவர்களுக்கு தன் நடனத்தால் அசத்தியுள்ளார்.

வைஜெயந்திமாலா நடிகையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.