முக்கிய செய்திகள்

புதன்கிழமை அரசு விடுமுறை, ஒருவாரம் துக்கம் அனுசரிப்பு:தமிழக அரசு அறிவிப்பு

திமுக தலைவர் கலைஞர் மறைவை ஒட்டி, புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு சார்பில் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, கலைஞரின் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இந்நிலையில், கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதேபோன்று, அவர் பிறந்த இல்லம் முன்பு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

 

TN Announces Tomorrow Holiday