
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளதாக சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக சட்டப்பேரவை வளாகத்தினுள் முன்னாள் தமிழக முதல் மு.கருணாநிதியின் உருவப்படத்தை மேதகு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைப்பார். விழாவில் ஆளுநர்,முதல்வர் மற்றும் அமைச்சர்ள் பங்கேற்கின்றனர் இந்த விழாவிற்கு அனைவரும் பாகுபாடின்றி அழைகப்படுவார்கள் என்றார். பேட்டியின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உடனிருந்தார்.