முக்கிய செய்திகள்

7 பேர் விடுதலை: ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அமைச்சரவை முடிவு

TN cabinet decided for recommend to Governer

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம்அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, தமிழக அமைச்சரவை கூடி தற்போது முடிவெடுத்துள்ளது.