ஆளுநர் ரவி அவர்களே, சிறிது நேரம் அமைதி காக்கவும் : கனிமொழி எம்.பி காட்டம்..

திமுக மகளிர் அணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி தனது டிவிட்டர் பதிவில்..

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.
வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.
தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை!
நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி அவர்கள், சிறிது நேரம் அமைதி காக்கவும்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..

புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி..

Recent Posts