முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்கள், அரசு சார்ந்த அமைப்புகள் ஆகியனவற்றிற்கு வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அரசின் கருவூலங்கள், குறைந்த ஊழியர்களைக் கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வியாழக்கிழமை முதல், 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, புதுச்சேரி மாநிலத்திலும், வெள்ளிக்கிழமை, பொது விடுமுறை விடப்பட்டு, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பிற்பகலில், வாஜ்பாயின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதை முன்னிட்டு, மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு, அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் மறைவை அடுத்து மத்திய அரசு அரை நாள் விடுமுறை அளித்துள்ளது. வாஜ்பாய் மறைவை அடுத்து நாடுமுழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
TN govt Announce Full day leave, Central Govt only give Half Day