
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது. நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மக்களுக்கு அரிசி,சர்க்கரை,கரும்பு உள்ளிட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பாக குடும்ப அட்டைதார்களுக்கு கொடுக்கவுள்ள நிலையில் அதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது. அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழ் மக்களுக்கும் வழங்கப்படவுள்ளது.