தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பதிவேற்றம் செய்யபட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி திடீரென இணையதளத்திலிருந்து அமைச்சர்களின் விவரங்கள் நீக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் செயல்பாடுகள் தொடர்பான அதிகாரபூர்வ இணையதளத்தில் எந்த காரணமும் தெரிவிக்காமல் அமைச்சர்களின் விவரங்கள் நீக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும், நீக்கப்பட்ட விவரங்களை மீண்டும் பதிவேற்ற அரசுக்கு உத்தரவிடவும் கோரப்பட்டிருநது. விசாரணையின்போது அமைச்சர்களின் முழு விபரங்கள் அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
TN Govt Replied in Court