தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 2250 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் துணை செவிலியர்,கிராம செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியட்டுள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் வரும் 31.10.2023-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதியம் மாதம் ரூ19,500- 62,000
தகுதி 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பொது சுகாதாரத்துறை இயக்குனகரம் வழங்கும் இரண்டு ஆண்டு துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்க்கான பயிற்ச்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குனரகம் வழங்கும் 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது 1.107.2023 தேதியின் படி 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் அதிக பட்ச வயதுவரபில்லை.
விண்ணப்ப கட்டணம் குறித்து கீழ்காணும் இணையதளத்தில் பார்த்து கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வோ அல்லது எழுத்த தேர்வு ஏதும் இல்லை, மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
WWW.mrb.tn.gov.in