
இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் தாயாரிக்கப்படும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
ஒடிசா மாநிலம் பால்சோர் கடற்கரையில் நடைபெற்ற சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய ஏவுகணை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதிநவீன் அக்னி ப்ரைம் ஏவுகணை 1000 -2000 கி.மீ வரை துல்லியமாக தாக்க கூடிய திறமையுள்ளது என்றும் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க வல்லமை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.