கனமழை எதிரொலி: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில்,வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதன் எதிரொலியாக நாகை , திருவாரூர் மாவட்டங்களில் வியாழக்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வைத்தீஸ்வரன் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் அமைந்திருந்த ஆயிரம் ஆண்டு பழமையான தலவிருட்சமான வேப்ப மரம், மழை காரணமாக முறிந்து விழுந்தது.

வேருடன் பெயர்ந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி திருக்கோயில் சுற்றுச்சுவர் மீது விழுந்தது. ஆனால் இதில் யாருக்கும் பாதிப்பில்லை.

பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை நாடாளுமன்றம் வரும் 5-ஆம் தேதி கூடுகிறது..

திருவள்ளுவர் சிலை – படேல் சிலை: வலைகளில் வலம் வரும் ஒப்பீட்டு விமர்சனங்கள்

Recent Posts