முக்கிய செய்திகள்

இன்று நீட் தேர்வு : 13 லட்சம் பேர் பங்கேற்பு..


நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் 13.26 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.

ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள் தற்போது தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தேர்வு அறைக்கு வெளியே கடுமையான சோதனைகள் நடைபெறுகிறது. காதணிகள், கொலுசுகள் அணிந்த மாணவிகள் அவற்றை கழட்டிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.