முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்,: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்…

5 வயதுக்குட்பட்ட 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இதைத் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதற்காக 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். குழந்தைகளுக்கு பொம்மைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.